செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் கவுதம் மேனன் டீசர்

கவுதம் மேனன் பின்னணி வர்ணனையில் விஜய் மில்டனின் `கோலிசோடா 2' படத்தின் டீசர் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் கவுதம் மேனன் டீசர்
Published on

இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 8-ஆம் வெளியாக இருப்பதாக விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் குரலில் டீசர் நல்லபடியாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com