திமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி, திமிரு புடிச்சவன் படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார்.
திமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி
Published on

இசையமைப்பாளராக துவங்கிய விஜய் ஆண்டனி மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறார். பல்வேறு அவதாரங்களை எடுத்த விஜய் ஆண்டனி, தன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தி நடிகராக, எடிட்டராகவும் மாறியிருக்கிறார். எஸ் எஸ் ராஜமௌலியின் முன்னாள் உதவியாளர் கணேஷா இயக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் தன் ஒட்டு மொத்த திறமைகளையும் உபயோகப்படுத்த இருக்கிறார் விஜய் ஆண்டனி. போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய் ஆண்டனி இன்னொரு புதிய அவதாரத்தையும் எடுக்கிறார் விஜய் ஆண்டனி. பன்முகத் தன்மைகளை கொண்ட விஜய் ஆண்டனி, இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சிலம்பம் பயின்று வருகிறார். 

விஜய் ஆண்டனியின் இந்த முயற்சிகளை பற்றி இயக்குனர் கணேஷா கூறும்போது, "எல்லா துறைகளிலும் தன்னுடைய மொத்த உழைப்பையும் கொடுக்க முயற்சிக்கும் விஜய் ஆண்டனியின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அர்ப்பணிப்பும், பர்ஃபெக்‌ஷனும் பாராட்டுக்குரியது. ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதையும் தெளிவாகவும், சரியாகவும் செய்யக்கூடியவர். இந்த சிறந்த பண்பு தான் அவரின் கேரியரில் இந்த உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. 

இயக்குனர் கணேஷா

மேலும் இந்த படம் வழக்கமான போலீஸ் வெர்சஸ் வில்லன் கதையாக இல்லாமல், மைண்ட் கேம் கூறுகளை உள்ளடக்கி, அதிலும் பயணிக்கும் படம். சமகால இளைஞர்களின் நோக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் படமாக இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com