வாழ்க விவசாயி

பொன்னிமோகன் இயக்கத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் வாழ்க விவசாயி படத்தின் முன்னோட்டம்.
வாழ்க விவசாயி
வாழ்க விவசாயி
Published on

விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'வாழ்க விவசாயி'. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி நாயகனாக நடித்திருக்கிறார். 

மேலும் வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும்  விஜயன், கராத்தே கோபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னிமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். ரதன் சந்தாவத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். 

படம் குறித்து அப்புக்குட்டி கூறுகையில், இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும்  படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com