இமானுக்கும், யுவனுக்கும் இடையே நடந்த எதிர்பாராத விஷயம்

இசையமைப்பாளர் இமானின் நூறாவது படமான, ‘டிக் டிக் டிக்’ இசை வெளியீட்டு விழாவில், தனக்கும், யுவனுக்கும் இடையே நடந்த எதிர்பாராத விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
இமானுக்கும், யுவனுக்கும் இடையே நடந்த எதிர்பாராத விஷயம்
Published on

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். 

இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். எஸ், படத்தொகுப்பாளர் ப்ரவீண் ராகவ், கலை இயக்குநர் எஸ் எஸ் மூர்த்தி, பாடலாசிரியர் மதன் கார்க்கி, கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட அஜாக்ஸ் முத்துராஜ், விஎப்எக்ஸ் ஹெட் அருண் ராஜ், சண்டை பயிற்சி இயக்குநர் மிராக்கில் மைக்கேல் ராஜ் என படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

இதில் இமான் பேசும்போது, ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com