திடீரென்று ராதிகா ஆப்தேவுக்கு எதிராக கிளம்பிய நெட்டிசன்கள்

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு எதிராக திடீரென்று சமூக வலைத் தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே
Published on

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ள நிலையில் ஆபாசமாக நடிக்கும் ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி #BoycottRadhikaApte என்ற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ராதிகா ஆப்தே பர்செத் என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என்றும், விளம்பர படமொன்றிலும் ஆபாசமாக வந்தார் என்றும், இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவையும் ராஜ்குந்த்ராவை போல் கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள். ராதிகா ஆப்தேவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com