இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம்வரும் சித்தார்த் விபினுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
சித்தார்த் விபின்
சித்தார்த் விபின்
Published on

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’,  ‘ஜுங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் விபினுக்கும் - ஷ்ரேயா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. சித்தார்த்தின் நண்பரும், நடிகருமான நகுல் நேரில் சென்று வாழ்த்தியதோடு, திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக சித்தார்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com