சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மன்னித்த நடிகை

கேரளாவில் வாலிபர்களின் சில்மி‌ஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை, அவர்களை மன்னிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை
நடிகை
Published on

கேரள மாநிலம் கொச்சியில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு தாய் மற்றும் சகோதரியுடன் சென்ற இளம் நடிகை, அங்கு தன்னிடம் 2 வாலிபர்கள் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்தார். கொச்சி போலீசார் நடிகை வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வந்தனர்.

சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த ஆதில் முகமது, ரம்ஷாத் என்ற 2 வாலிபர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டனர். சரண் அடைவதற்காக களமசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், தெரியாமல் நடந்திருந்தால் மன்னிக்குமாறும் கூறினர்.

இந்நிலையில் வாலிபரின் சில்மி‌ஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை அந்த வாலிபர்களை மன்னிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் இந்த சம்பவத்தால் என் குடும்பம் வேதனை அனுபவித்து வருகிறது. இதுபோல அவர்கள் குடும்பமும் வேதனை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் போலீசார் நேற்று களமச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com