ஷங்கர், லிங்குசாமியை தொடர்ந்து டோலிவுட் பக்கம் செல்லும் பிரபல கோலிவுட் இயக்குனர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வருகின்றனர்.
ஷங்கர், லிங்குசாமி
ஷங்கர், லிங்குசாமி
Published on

`குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘ஷேர்ஷா’ என்கிற பாலிவுட் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இப்படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

விஷ்ணுவர்தன்

ஏற்கனவே தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா ஆகியோர் தெலுங்கு படங்களை இயக்கி வரும் நிலையில், தற்போது விஷ்ணுவர்தனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com