தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவை தொடர்ந்து நடிகை சன்னி லியோன் தென்னிந்திய சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்
Published on

இதனால் அவர் தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார்.

இந்நிலையில், தென்னிந்திய படம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். அதில் பாடல் ஒன்றுக்கோ, சிறப்பு தோற்றத்திலோ இல்லாமல் நாயகியாகவே நடிக்கிறார்.

`தம்பி வெட்டோத்தி சுந்தரம்', `சவுகார்பேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கிய வடிவுடையான் அடுத்ததாக இயக்கவிருக்கும் வரலாற்று படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். தெலுங்கில் உருவாகும் இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. இந்த படத்திற்காக கத்திச்சண்டை, குதிரை பயற்சி மேற்கொள்ள இருப்பதாக சன்னி லியோன் தெரிவித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com