ஸ்ரீதேவி மறைவு - படப்பிடிப்பு தளத்தில் கதறித் துடித்த ஜான்வி கபூர்

துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த அவரது முதல் மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத் தளத்தில் கதறித் துடித்தார். #Sridevi #RIPSridevi #SrideviDeath
ஸ்ரீதேவி மறைவு - படப்பிடிப்பு தளத்தில் கதறித் துடித்த ஜான்வி கபூர்
Published on

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்ததாக தகவல் வெளியானது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர், என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஸ்ரீதேவி மறைந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் மும்பை அந்தேரியில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவியின் வீட்டின் முன்பு சோகத்துடன் குவிந்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதால் தாயுடன் அவர் துபாய் செல்லவில்லை.

நள்ளிரவில் தாய் மரணம் அடைந்த தகவல் கேட்டு ஜான்வி கதறித் துடித்தார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மோனா இறந்தபிறகு, போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்தார். மோனாவின் மகனும், நடிகருமான அர்ஜூன் கபூர், மகள் அன்சுலா ஆகியோரையும் ஸ்ரீதேவி வளர்ப்பு தாயாக இருந்து கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sridevi #RIPSridevi #SrideviDeath

X

Maalai Malar
www.maalaimalar.com