மேலும் பலரின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் - ஸ்ரீரெட்டி மிரட்டலால் மீண்டும் பரபரப்பு

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வரும் ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் என்று புதிய மிரட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார். #SriReddy #SriLeaks
மேலும் பலரின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் - ஸ்ரீரெட்டி மிரட்டலால் மீண்டும் பரபரப்பு
Published on

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

தெலுங்கு சினிமா பட உலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு ஆசையை காட்டி நடிகைகளை படுக்கை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா பிரமுகர்கள் தன்னை ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று கூறினார்.

பிரபல தயாரிப்பாளரின் மகன் தன்னிடம் செக்ஸ் வைத்துக் கொண்டார் என்றும் கூறினார். இந்த நிலையில் நடிகர் ராணாவின் தம்பியும், பிரபல தயாரிப்பாளர் மகனுமான அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவல்களையும் வெளியிட்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமா பிரமுகர்கள் மீது குற்றம்சாட்டி வருவதால் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது.

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் ஸ்ரீரெட்டியின் நடவடிக்கைகளை கண்டித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி புதியதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “திரையுலகில் எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னிடம் பல சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையை கண்டித்து எனது போராட்டம் தொடரும் என்றார்.

ஏற்கனவே நடிகர் ராணாவின் தம்பியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஸ்ரீரெட்டி வெளியிட்டதால் தெலுங்கு திரைப்பட உலகில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது தன்னிடம் பல பிரமுகர்களின் ரகசியங்கள் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறி உள்ளதால் தெலுங்கு சினிமா உலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SriReddy #SriLeaks

X

Maalai Malar
www.maalaimalar.com