ராணா தம்பியை தொடர்ந்து ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குநர்

நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதியை தொடர்ந்து தெலுங்கு படஉலகின் பிரபல இயக்குநர் ஒருவரும் ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #SriReddy #SriLeaks
ராணா தம்பியை தொடர்ந்து ஸ்ரீலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குநர்
Published on

தெலுங்கு பட உலகில் நடிகைகளை அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் புகைப்படங்களை வெளியிடுவேன் என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

ஸ்ரீலீக்ஸ் விவகாரம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், முதலில் ஒரு இயக்குநர், நடிகர் மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்த ஸ்ரீரெட்டி, நேற்று ராணாவின் தம்பி அபிராம் டகுபதியுடனான நெருங்கிய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவரின் முகத்தை தோலுறித்துக் காட்டுவதாகவும், அவரது புகைப்படத்தை வெளியிடுவேன் எனக் கூறி ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தெலுங்கில் முன்னணி இயக்குனரான கோனா வெங்கட் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள இயக்குனர் கோனா வெங்கட், 

`நடிகை ஒருவர் சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களை பற்றியும், என்னைப் பற்றியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, போலீஸ் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். உண்மை நிச்சயம் வெளியாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன்' என்று கூறியுள்ளார். #SriReddy #SriLeaks

X

Maalai Malar
www.maalaimalar.com