ஆர்.கே.சுரேஷ் மென்மையானவர்: ‘கடுகு’ சுபிக்ஷா

‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் ஆர்.கே.சுரேஷை மென்மையானவர் என்று கூறியிருக்கிறார். அவர் குறித்த சுபிக்‌ஷா தெரிவித்த தகவல்களை கீழே விரிவாக பார்ப்போம்.
ஆர்.கே.சுரேஷ் மென்மையானவர்:  ‘கடுகு’ சுபிக்ஷா
Published on

“இந்த படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக நான் நடிக்கிறேன். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படம். குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன்.

இந்த படத்துக்கு ஒப்பந்தமான பிறகுதான், பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் பார்த்தேன். அதில் அவருடைய அதிரடியான நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். அவருடன் எப்படி நடிக்க போகிறோம் என்ற பயத்துடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com