குறும்படத்தில் நடித்த ரித்திகா சிங்

இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்த ரித்திகா சிங், தற்போது குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
குறும்படத்தில் நடித்த ரித்திகா சிங்
Published on: 

மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான இவர், இப்படத்தில் குத்துச் சண்டை வீரராகவே நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படம் சூப்பர் ஹிட்டானது

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ரித்திகா. 

பாலிவுட் கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் குறும்படத்திற்கு 'ஐ யம் சாரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படம் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளைப் பற்றிப் பேசும் மியூசிக்கல் குறும்படமாக உருவாகியிருக்கிறது. இந்தக் குறும்படத்தை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார்.

இந்தக் குறும்படம் மகளிர் தினமான இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை நிறுத்தக்கோரும் விழிப்புணர்வு குறும்படமாக உருவாகியிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com