மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன - ரஜினிகாந்த்

மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகின்றன என பத்திரிகையாளர்கள் உடனான பிரத்யேக சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #RajiniMandram #Rajinikanthpoliticalentry
மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன - ரஜினிகாந்த்
Published on

அரசியலில் மும்முரம் காண்பித்து வரும் ரஜினிகாந்த், நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற பிரத்தியேக புதிய இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் உண்மையான, நேர்மையான, நாணயமான, மதசார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல் என  நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என கூறினார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்குகின்றன. நானும் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளேன். அரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணி செய்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன். நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை.

கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிகொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும். இவ்வாறு கூறினார். #RajiniMandram #Rajinikanthpoliticalentry

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com