பிரியா வாரியர் படத்தின் டைரக்டருக்கு நோட்டீசு

பிரியா வாரியர் நடித்த பாடலுக்கு எதிராக புகார்கள் குவிந்ததை அடுத்து படத்தின் டைரக்டருக்கு ஐதராபாத் போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
பிரியா வாரியர் படத்தின் டைரக்டருக்கு நோட்டீசு
Published on

ஒரு அடார் லவ் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ‘டப்’ செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டா போட்டி நடக்கிறது. டப்பிங் உரிமை ரூ.2 கோடிக்கு விலை பேசப்படுகிறது. பிரியா வாரியருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. அவரது சம்பளமும் உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. ‘மாணிக்க மலராயி பூவி’ பாடல் வரிகள் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாடல் உள்ளது என்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜின்சி போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com