திமிரு புடிச்சவனுக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்

திமிரு புடிச்சவனுக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்

டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி பெண்ணாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், அடுத்ததாக திமிரு புடிச்சவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
Published on

நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிவேதா நடித்துள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவேதா விண்வெளி பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நிவேதா. இதில் விஜய் ஆண்டனி இன்ஸ்பெக்டராகவும் நிவேதா சப்-இன்ஸ்பெக்டராகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா, இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com