தனுஸ்ரீ தத்தா புகாருக்கு நானா படேகர் பதில்

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிவந்த பாலியல் புகாருக்கு நடிகர் நானா படேகர் பதிலளித்துள்ளார். #TanuShreeDutta #NanaPatekar #Harassment
தனுஸ்ரீ தத்தா புகாருக்கு நானா படேகர் பதில்
Published on

பாலிவுட்டின் மூத்த நடிகர் நானாபடேகர். இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் இவர் மீது இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

2008-ம் ஆண்டு ஹார்ன் ஒகே பிளீஸ் என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார். அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இது பாலிவுட் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

இந்த பாலியல் புகார் தொடர்பாக நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, உள்பட 4 பேர் மீது மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானா படேகர் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன் மீதான பாலியல் புகாரை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதற்கிடையே தனுஸ்ரீ தத்தா புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நானா படேகருக்கு சினிமா மற்றும் டி.வி. நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதற்கு நானா படேகர் பதில் அனுப்பி உள்ளார். அவர் கொடுத்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:-

என் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. ஆதாரமற்றது. தவறானது. தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

இவ்வாறு அந்த பதிலில் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையமும் நானா படேகருக்கு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com