ஐயங்கரனுடன் பிறந்த நாள் கொண்டாடிய மகிமா நம்பியார்

சாட்டை படம் மூலம் பிரபலமான மகிமா நம்பியார், தனது பிறந்த நாளை ‘ஐயங்கரன்’ படக் குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார்.
ஐயங்கரனுடன் பிறந்த நாள் கொண்டாடிய மகிமா நம்பியார்
Published on

‘சாட்டை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் மகிமா நம்பியார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘குற்றம் 23’ படம் வெளியானது. அருண் விஜய் நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் ‘கொடி வீரன்’ வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இவர் ‘ஐயங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். காமன்மேன் ப்ரசன்ஸ் பி.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை ரவி அரசு இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். நேற்று இரவு நேர படப்பிடிப்பிற்கு வந்த நாயகி மகிமா நம்பியாரை, ஹீரோ ஜி.வி.பிரகாஷ், நடிகர் காளி வெங்கட், இயக்குனர் ரவி அரசு, கேமராமேன் சரவண அபிமன்யு, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி மழையில் நனைத்துள்ளனர். பின் கேக் வெட்டி தன் பிறந்த நாளை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com