அருண் விஜய்
அருண் விஜய்

மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Published on

`தடம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்', `சாஹோ' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்' மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னா நடிக்க உள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com