இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் தீவிரம் காட்டிவரும் நிலையில், இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டமிட்டுள்ளாராம். #KamalHaasan #BiggBoss2
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
Published on

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். நிழச்சியை தொகுத்து வழங்க தன்னை அணுகியவுடன் இதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் கதையும் நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதை தான். கமல் ஒரு பக்கம் தீவிர அரசியலையும் இன்னொரு பக்கம் மீடியா பணியையும் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

தேர்தலில் அறிவித்து போட்டியிடும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சரியான வழி என்பதே கமலின் கணக்காக உள்ளது. #KamalHaasan #BiggBoss2 #Indian2 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com