பழைய காக்கி சட்டையை புதுசாக மாற்றும் கமல்

கமல், அம்பிகா, சத்யராஜ் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான காக்கி சட்டை திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் புதிய பொலிவுடன் வெளியாக இருக்கிறது.
பழைய காக்கி சட்டையை புதுசாக மாற்றும் கமல்
Published on

பழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இப்படி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், சிவகாமியின் சபதம், வசந்த மாளிகை போன்ற படங்களும் வெளியாகின.

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை புத்தம் புதிதாக டிஜிட்டலில் வெளியிட்டார்கள். தற்போது கமல்ஹாசன் படங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் வேலை நடந்து வருகிறது.

32 ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘காக்கி சட்டை’. இதில் கமலுடன் அம்பிகா, சத்யராஜ் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார். சத்யா மூவீஸ் தயாரித்த இந்தப் படம் மிகப் பெரிய வசூலைக் குவித்த படமாகும். 

தற்போது இந்தப் படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் உலகெங்கும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். டார்வின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இந்தப் படத்தை டிஜிட்டலில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் உலகெங்கும் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com