

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியாகிய ஒரு சில நாட்களிலேயே அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவதால் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது. அதற்கான ரீமேக் உரிமையை கைப்பற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் தேவர்கொண்டா கதாபாத்திரத்தில் சிம்பு அல்லது விஜய் சேதுபதி நடித்தால் நல்ல வரவறேப்பை பெறும் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.