

இந்த படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், ''இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன்.
இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. நான் நினைத்ததை விட மேலும் `கோலி சோடா 2' சிறப்பாக உருவாகி வருகிறது''
சமீபத்தில் `கோலி சோடா 2' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசருக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனே பின்னணி வருணணை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.