ஒரே வார்த்தையில் வாய்ப்பை பறிகொடுத்த நடிகை

ஒரே வார்த்தையில் வாய்ப்பை பறிகொடுத்த நடிகை
Published on

முன்னணி நடிகை ஒருவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாராம். திடீரென பிரபல இயக்குனர் தன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இந்த நடிகை தான் சரியாக இருப்பார் என்று அவரை புக் செய்தாராம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவே பல இயக்குனர்கள் பார்வை நடிகையின் மீது திரும்பியதாம்.

இப்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகையை பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க புக் செய்தார்களாம். ஒப்பந்தம் செய்தது செய்தபடியே இருக்கிறது என்று நடிகையை ஷூட்டிங்கிற்கு வருமாறு இயக்குனர் அழைத்தால் இதோவரேன், அதோவரேன் என்று அலைக்கழித்து வருகிறாராம். இதனால் கடுப்பான இயக்குனர் இந்த நடிகையை வேண்டாம் நம்மோட அந்த நடிகையை புக் செய்யுங்கள் என்று மற்றொரு நடிகையை தட்டி தூக்கிவிட்டாராம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com