இயக்குனர் சேரனின் புதிய முயற்சி!

சமூக வலைதளங்கள் வழியாகவும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளார் இயக்குனர் சேரன்.
இயக்குனர் சேரனின் புதிய முயற்சி!
Published on: 
சமூகப்படங்களை கருத்தாழத்தோடு மண்ணின் பதிவுகளாக முன் வைத்து வருபவர் இயக்குனர் சேரன். தனது படங்கள் மூலமாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் வழியாகவும் மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தியும் குரல்கொடுத்தும் வருகிறார்.

அதன் நீட்சியாக தற்போது "வாக்காளன் குரல்" என்கிற ட்விட்டர் பக்கத்தை ஆரம்பித்துள்ளார் இயக்குனர் சேரன். இப்பக்கத்தில் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரச்சனைகளை படத்தோடு பதிவு செய்யலாம். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த தளம் கொண்டு செல்லும். தீர்வுகள் கிடைக்க இப்பகிர்வுகள் மூலம் அழுத்தம் கொடுக்கலாம் என்பது இயக்குனர் சேரனின் நோக்கம்.

வாக்காளனின் குரல் ஒலிக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே இப்பக்கத்தின் நோக்கம். அரசியல் வாதிகளை திட்டுவதோ அரசை விமர்சிப்பதோ வேண்டாம் என்ற வேண்டுகோளோடு மக்களுக்கு இப்பக்கத்தை இன்று தொடங்கியுள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com