டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்

உடல் எடை குறித்தான விமர்சனங்களுக்கு சல்மான் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
Salman Khan Bigg Boss
Published on
Summary

பாலிவுட் நடிகரான சல்மான் கான் சமீபத்தில் இந்தி மொழியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, இணையத்தில் உடல் எடை தொடர்பாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது சட்டையை கழற்றி உடல் எடை குறித்து கேலி செய்வதற்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப் தனது கணவருடன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, திருமணத்திற்கு பிறகான அவரது உடல் எடை குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து கத்ரினா-வுக்கு ஆதரவாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் திரைப்பிரபலங்களும் நடிகைக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்தி மொழியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். அப்போது நடந்த ‘வீக் எண்ட் கா வார்’ நிகழ்ச்சியில் அவர் தனது ஆவேசமான கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர், “ஒரு பெண் உடல் எடை கூடினால், அவர் குண்டாகிவிட்டதாக வலைதளத்தில் மோசமான விமர்சனங்கள் எழுகிறதை பார்க்க முடிகிறது.

ஒரு வயதான நடிகர், அவர் வயதாகிவிட்டார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறார். இந்த வகையான விமர்சனங்கள் பொதுவாக பார்க்கப்படுகிறது, ஆனால் அவை உண்மையில் சம்பந்தப்பட்ட நபர்களை மிகவும் அதிகமாக பாதிக்கிறது.

ஒருவர் கர்ப்பமானார் என்பதற்காக, அவரை ஏன் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்த்தரமாக கிண்டல் செய்கிறீர்கள்?

கர்ப்பத்திற்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வரும் பெண்கள், தங்களின் முந்தைய இயல்பான தோற்றத்திற்கு திரும்புவார்கள். மேலும், அவர்கள் விரும்பினால் மீண்டும் தங்களின் உடலை ஃபிட்டாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள்.

நிச்சயமாக எனக்கு 60 வயது ஆகிவிட்டது. என்னால் எனது இளமை காலத்தில் நடித்த ‘மைனே பியார் கியா’ படத்தின் உடலைப் போல் என்றென்றும் இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

இதையடுத்து மற்றவர்களை விமர்சனம் செய்வபர்கள் முதலில் உங்களை பாருங்கள், என்று கூறிய சல்மான் கான் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று தனது சட்டையை கழற்றினார்.

அப்போது அவர் மேடையில் தனது கவ்பாய் தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டை கழற்றி தனது உடலை கேமராவில் காண்பித்தார்.

இதைத்தொடர்ந்து அவர், உங்கள் படம் நன்றாக இல்லை என்றாலும், நாங்கள் நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நீங்கள் தியேட்டரில் திரைப்படத்தை பார்ப்பதற்கு தான் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள்; ஆனால் நீங்கள் எங்களை விலைக்கு வாங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இறுதியில் அவர், பொதுவெளிகளில் சாதாரன உடையில் வரும் நடிகைகளை, அவர்களின் அனுமதியின்றி தங்கள் கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பெண்களின் இடுப்பு, தொடைகள் மற்றும் முதுகு பகுதிகளை வேண்டுமென்றே கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களை சம்லான் விமர்சனம் செய்தார். இதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு, ஒரு பொழுதுபோக்கு செய்திகளாக பார்க்கப்படுவதாகவும் சல்மான் கான் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com