யோகி பாபு நடித்த `சட்னி சாம்பார்' வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
யோகி பாபு நடித்த `சட்னி சாம்பார்' வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.

கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியது.

இந்த தொடர் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 எபிசோட்கள் இடம்பெற்றுள்ளது. இதே நாளில் தான் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com