மலையாளம் பிக்பாஸில் சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய பெண் - நிகழ்ச்சியை நிறுத்தி பாதியிலேயே அழைத்த பெற்றோர்!

தமிழிலும் பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மலையாளம் பிக்பாஸில் சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய பெண் - நிகழ்ச்சியை நிறுத்தி பாதியிலேயே அழைத்துச் சென்ற பெற்றோர்!
Published on: 

தமிழைப் போல, மலையாளத்திலும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 8வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மலையாள பிக்பாஸில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான இன்ஃப்ளூயன்சர் நேஹா பாத்திமா, தனது சக போட்டியாளரான தாஷி ராஜ் என்ற சந்தோஷிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால், போட்டியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வழக்கமான 'குடும்ப வாரத்திற்கு' முன்பாகவே, நேஹாவின் பெற்றோர் நேஹாவை சந்தித்து, அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறக் கேட்டு கொண்டுள்ளனர்.

அழுதுக்கொண்டே பேசிய பெற்றோர்

இந்த புரோமோ தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. புரோமோவின் படி நேஹாவின் தந்தை பேசியதாவது;

“நேஹா, உனக்கு எங்களை நினைவிருக்கிறதா? உனக்கு நினைவில் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை,”.

தொடர்ந்து அழுதுகொண்டே பேசிய நேஹாவின் தாய்.,

“வீட்டில் உள்ள அனைவரும் விளையாடுகிறார்கள், ஆனால் நீயோ உன் உணர்ச்சிகளையே பிடித்துக் கொண்டிருக்கிறாய். மற்றவர்கள் உன்னை அவர்களின் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

விளையாட வேண்டாம் என்று நாங்கள் சொன்ன அதே விளையாட்டைத்தான் நீ விளையாடுகிறாய். நூறு சதவிகித வலியையும் நாங்கள்தான் உணர்கிறோம்.” என தெரிவித்தார்.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்

நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் ஒன்றில், நேஹா பாத்திமா தாஷியிடம் தனக்கு அவரைப் பிடித்திருப்பதாகவும், நிகழ்ச்சிக்குப் பிறகு தனது பெற்றோரின் சம்மதத்துடன் தங்கள் உறவைத் தொடர விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

தாஷி மற்றொரு பெண் போட்டியாளருடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நேஹாவுக்கும், தாஷிக்கும் இடையே இந்த உரையாடல் நடந்தது.

தாஷி ராஜ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், நேஹா முஸ்லீம் சமூகத்தைச் சேரந்தவர் என்றும் கூறப்படுகிறது.

X