மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி?

மகாராஜா திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.
மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி?
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது மகாராஜா திரைப்படம். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது.

மகாராஜா திரைப்படம் சீன மொழியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சர்வதேச அங்கீகாரம் பெற்றது. மேலும் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு உலகளவில் உள்ள பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

இந்நிலையில், மகாராஜா பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய்சேதுபதி- இயக்குனர் நிதிலன் மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com