சொன்ன தேதியில் வெளியாகுமா தங்கலான்?

தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
சொன்ன தேதியில் வெளியாகுமா தங்கலான்?
Published on

பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.

தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என  தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com