'பராசக்தி' டைட்டில் யாருக்கு சொந்தம்? - விஜய் ஆண்டனி விளக்கம்

மார்கன் படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
'பராசக்தி' டைட்டில் யாருக்கு சொந்தம்? - விஜய் ஆண்டனி விளக்கம்
Published on

மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. ஒரு விறுவிறுப்பான இன்வஸ்டிகேஷன் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் டைட்டில் பிரச்சனை தெரியாமல் நடந்தது. அவர்களுக்கு நான் அந்த டைட்டிலை வைத்திருந்தது தெரியாது; தயாரிப்பாளரின் நிலையை உணர்ந்து அன்பின் காரணமாக 'பராசக்தி" டைட்டிலை விட்டுக் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.

விஜய் ஆண்டனி நடித்து வரும் சக்தி திருமகன் படத்தின் தெலுங்கில் பதிப்பிற்கு பராசக்தி' என்று பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com