தயாரிப்பாளர் அட்லீக்கு நெருக்கடி கொடுக்கும் பாலிவுட் - காரணம் என்ன ?

அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர்.பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தயாரிப்பாளர் அட்லீக்கு நெருக்கடி கொடுக்கும் பாலிவுட் - காரணம் என்ன ?
Published on

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இயக்குனர் அட்லீ. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என விஜயை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குனராக அவரது காலடி தடத்தை பதித்தார்.இத்திரைப்படம் உலகளவில் 1150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக அட்லீ இயக்கிய தெறி திரைப்படத்தை இந்தி மொழியில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் ப்ரோமோஷன் பணிகளின் போது கபில் ஷர்மா நிகழ்ச்சியில் அவரை உருவ கேலி செய்தனர் அதற்கு கொடுத்த பதில் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வட இந்தியாவில் போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. விநியோகஸ்தர்கள் யாரும் போதிய திரையரங்களை கொடுக்க மறுக்கிறார்கள் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

அட்லீ ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆனாலும் ஒரு தயாரிப்பாளராக மாறும் அட்லீ-க்கு வட இந்தியாவில் நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். அட்லீயின் வளர்ச்சி பிடிக்காததால் இதனை செய்கிறார்களா? இல்லை தமிழ் ஆட்கள் உள்ளே வரக்கூடாது என செய்கிறார்களா? என தெரியவில்லை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com