`யார் வந்தாலும் நாங்கதான் ஜெயிப்போம்'-Ace படத்தின் டிரெய்லர் வெளியீடு

விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.ACE திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.
`யார் வந்தாலும் நாங்கதான் ஜெயிப்போம்'-Ace படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.

இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டிரெய்லரில் சிவகார்த்திகேயன் வசனம் இடம் பெற்றது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com