ஒரு அற்புதமான திரைக்கதை ஆசிரியரை இழந்து நிற்கிறோம்- ஏ.ஆர்.முருகதாஸ்

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல்.
Director Bhakyaraj- AR Murugadoss
Published on

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

பாக்யராஜ் சார் இறந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எங்கள் காலத்தில் திரைக்கதையை கற்றுக்கொண்டதே பாக்யராஜ் சார் படங்கள் பார்த்துதான்.

ஒரு அற்புதமான திரைக்கதை ஆசிரியரை இழந்து நிற்கிறோம். அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு இது மாதிரி கிராமத்து கதைகளை நகைச்சுவையாக - சொல்வதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை அவருடைய படங்கள் எல்லாமே

இந்திய அளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு HIT ஆகியிருக்கிறது. அவருடைய படங்கள் எல்லாமே காவியமாக, சினிமா இருக்கும் வரைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com