பிரியங்கா மோகனுக்கும் ஜெயம் ரவிக்கும் கெமிஸ்ட்ரிக்கு மேல வேறொன்று ஒர்க்கவுட் ஆகியிருக்கு - விடிவி கணேஷ்

பிரதர் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரதர் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பிரியங்கா மோகனுக்கும் ஜெயம் ரவிக்கும் கெமிஸ்ட்ரிக்கு மேல வேறொன்று ஒர்க்கவுட் ஆகியிருக்கு - விடிவி கணேஷ்
Published on

பிரதர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, பூமிகா, நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ், இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் விடிவி கணேஷ் பேசும் போது, "இயக்குனர் ராஜேஷ் சிறந்த இயக்குனர். பிரதர் படம் சிறப்பாக வந்துள்ளது. ஜெயம் ரவி அழகான நடிகர், திறமையான நடிகர், படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய காட்சிகளில் இதை அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்."

"எனக்கு தெரிந்து சிம்புக்கு பிறகு ஜெயம் ரவி தான் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். நாயகி பிரியங்கா மோகனுக்கும் ஜெயம் ரவிக்கும் கெமிஸ்ட்ரியை தாண்டி வேறு ஒன்று ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது," என்று தெரிவித்தார்.

ஜெயம் ரவி - பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com