விஸ்வநாத் அண்டு சன்ஸ்- திரை விமர்சனம்
விஸ்வநாத் அண்டு சன்ஸ்- விமர்சனம்(3 / 5)
கதை
தமிழ்நாட்டில் முன்னணி தொழில் அதிபராக திகழ்கிறார் சூர்யா. இவர் துப்பாக்கி சுடும் வீரராகவும் இருக்கிறார். சூர்யா திருமணம் மீது பற்றே இல்லாம் இருக்கிறார். இவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியை பார்க்க ஆசைப்படுகிறார் சூர்யாவின் தாய் ராதிகா.
தயாரின் விருப்பத்தை நிறைவேற்றவும், தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற அடிப்படையில், வாடகை தாய் மூலம் சூர்யாவிற்கு மகன் பிறக்கிறார்.
சில நாட்களில், குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு குழந்தையின் தாய் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
இதற்காக, சூர்யா வாடகை தாயான மமிதா பைஜூவை அழைக்க அமெரிக்கா செல்கிறார். அங்கு, மமிதா பைஜூவிடம் பேசி சம்மதிக்க வைத்து சென்னைக்கு அழைத்து வருகிறார்.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பின்னர், ஒரு மாத காலம் மமிதா பைஜூ குழந்தையுடன் இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மமிதாவிற்கு குழந்தை மீது ஈர்ப்பு வருகிறது. சூர்யா மீதும் காதல் பிறக்கிறது.
இதனால், மமிதா பைஜூ சூர்யாவை விட்டு பிரிய தயங்குகிறார். ஆனால், மமிதா பைஜூவை எப்படியாவது அமெரிக்காவுக்கு விரட்டி விட சூர்யா துடிக்கிறார். இருவரும் சேர மாட்டார்களா என்று ராதிகா ஏங்குகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே கலகலப்பான மீதிக்கதை.
நடிகர்கள்
நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூர்யா. எமோஷனல் காட்சிகளில் கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். சூர்யாவின் அனுபவ நடிப்பு மிகப்பெரிய பலம். குடும்ப கதையில் கலக்கிவிட்டார்.
கலகலப்பான கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ கலக்கிவிட்டார். காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ராதிகாவின் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. சூர்யாவுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட துடிக்கும் அவரது எண்ணங்கள் கலகலப்பு.
ஓரிரு காட்சிகளே வந்தாலும் ரவீனா டாண்டன் சிறப்பு சேர்க்கிறார். சுனில் செய்யும் சிறு சிறு காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இதர நடிகர், நடிகைகளும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
கலகலப்பு நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் எட்டி பார்க்கின்றன.
ஒரு அழகான குடும்ப கதையில் காதல், நகைச்சுவை, எமோஷனல், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் இடம்பெறச் செய்து ரசித்து பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி. இன்டர்வெல் காட்சி சிரிப்புக்கு கேரண்டி.
இசை & ஒளிப்பதிவு
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமாரின் இசையும் படத்துடன் ஒன்று சேர்கிறது.

