விமல் - சூரி நடித்த படவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

படவா படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார்.ஜே ஸ்டூடியோ இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.
விமல் - சூரி நடித்த படவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் படவா. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படவா வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஷ்ரிடா ராவ், கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜே ஸ்டூடியோ இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, வினோத் கண்ணா படத்தொகுப்பை செய்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் 2K லவ் ஸ்டோரி திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com