கோடை விடுமுறையில் வெளியாகும் துருவ நட்சத்திரம் - கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'.மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிப்பெற்றது.
கோடை விடுமுறையில் வெளியாகும் துருவ நட்சத்திரம் - கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்
Published on

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.

இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் சமீபத்தில் கவுதம் மேனன் கலந்துக் கொண்ட நேர்காணல் ஒன்றில் இதனைப் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் " மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிப்பெற்றது. எனக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அப்படத்தின் வெற்றி துருவ நட்சத்திரம் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது. திரைப்படம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் ஏறக்குறைய முடிவடைந்தது. இதனால் இப்படியே சூழல் சரியாக இருந்தால். திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்துள்ளார். இந்த தடவை திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com