விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் நாளை வெளியீடு!

படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் நாளை வெளியீடு!
Published on

பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் 'பத்தா'.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் செல்லமே மகளே பாடல் அபயங்கர் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com