விஜய் சேதுபதியின் 51-வது திரைப்படம் - கவனம் ஈர்க்கும் டைட்டில் டீசர்

இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் 51-வது திரைப்படம் - கவனம் ஈர்க்கும் டைட்டில் டீசர்
Published on

கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்திற்கு ஏஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு கையில் பகடையை உருட்டுவது போலவும் மறுக் கையில் சுருட்டை பிடித்தபடி போஸ்டர் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com