சீனாவில் ரிலீசாகும் 'மகாராஜா'

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சீனாவில் ரிலீசாகும் 'மகாராஜா'
Published on

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com