சூர்யா படத்தில் இணைந்த விஜய் பட நாயகி - #சூர்யா44 அப்டேட்

அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
சூர்யா படத்தில் இணைந்த விஜய் பட நாயகி - #சூர்யா44 அப்டேட்
Published on

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுண்டபுரமுலோ படத்தின் மூலம் பிரபலமானார் பூஜா ஹெக்டே. அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாட்கள் நடைப்பெறவுள்ளது. அதற்கு அடுத்து ஊட்டியில் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் சுற்று சூழல் பாதிப்பை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com