அடுத்தடுத்து வெளியாகும் விஜய் ஆண்டனியின் பட அப்டேட்ஸ்

விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளார்.நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து வெளியாகும் விஜய் ஆண்டனியின் பட அப்டேட்ஸ்
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ' திரைப்படம் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தை குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுட்தேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com