தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!

படம் நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!
Published on: 

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பாக்குட்டி படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி வெளியாகவிருந்த படம், ஒத்திவைக்கப்பட்டு நவம்பர்.6ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது.

மு. மாரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, சித்ரா லட்சுமணன், முருகானந்தம், மூணார் ரமேஷ், பிரவீணா, ஹரிப்ரியா இசை, குமார் நடராஜன், லிசி ஆண்டனி, விஜயன், ஹரிப்ரியா, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்துள்ளார். நவ.6ம் தேதியன்று சூர்யாவின் சீன் படமும் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com