தீபாவளியை குறி வைக்கும் விடுதலை - 2

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
தீபாவளியை குறி வைக்கும் விடுதலை - 2
Published on

இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா திரைப்படமும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் உண்டு.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது.

விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது

அதன்படி தற்போது ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது விடுதலை 2 திரைப்படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விடாமுயற்சி, கங்குவா, கிஸ், எல்.ஐ.சி, போன்ற திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் விடுதலை 2 படமும் வெளியாகுவதால் வரும் தீபாவளிக்கு பெரும் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com