மகாராஜா படக்குழுவினருடன் வெங்கட் பிரபு

திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார்.
மகாராஜா படக்குழுவினருடன் வெங்கட் பிரபு
Published on

குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தற்பொழுது உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அந்த திரையிடலுக்கு படக்குழிவினர் கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தின் VFX பணிகளுக்காக அவரும் அமெரிக்காவில்தான் தற்பொழுது உள்ளார். இதனால் நேற்று மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com