தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

தேவரா வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தேவரா படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.
தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
Published on

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் 3 - வது பாடலான தாவூதி பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்தை சென்சார் அதிகாரிகள் நான்கு காட்சிகளை நீக்குமாறு தெரிவித்துள்ளனராம். அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் அவற்றை நீக்குமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com