டாக்ஸிக் - விமர்சனம்!

இப்படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Toxic
Published on
Summary

பிரம்மாண்டமான போதைப்பொருள் கடத்தல் உலகத்தை அழுத்தமாக பேசுவதும், உறவுகளுக்குள் இருக்கும் உளவியல் சிக்கல்களை கையாண்டிருப்பதும் படத்தின் பெரும் பலம்.

மிரட்டல்!

'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் பாதியில், யஷ் ( ராயா) அசுரத்தனமான மாஸ் என்ட்ரி, சிறப்பான லுக் மற்றும் அவருக்கான எலிவேஷன் காட்சிகள் திரையரங்கில் அனல் பறக்க வைக்கின்றன.

ஒரு பழிவாங்கும் கதையாக நகரும் இப்படத்தில், யஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளதோடு, இடைவேளைக்கு முந்தைய 15 நிமிட காட்சிகள் முற்றிலும் நயன்தாராவின் அதிரடியான மிரட்டல் காட்சிகள் வந்துள்ளன.

கியாரா அத்வானி சர்க்கஸ் காட்சிகளில் மிக அழகாக மிளிர, ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், "தபாஹி" பாடல் காட்சியமைப்பும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

படம் தொடங்கியதில் இருந்தே 'சர்க்கஸ் ஃபைட்' மற்றும் 'லேடீஸ் லேடீஸ் ஃபைட்' என அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும், சில இடங்களில் வன்முறை அதிகமாகவும், ஓவராகவும் இருப்பது சற்று அசெளகரியத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக படத்தின் முதல் பாதி ஒரு சுவாரசியமான, சுமாரான வேகத்தில் ரசிகர்களைக் கவர்ந்து நகர்கிறது.

மொத்தம் 3 மணிநேரம் 14 நிமிடங்கள் கொண்டுள்ள இப்படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

'கே.ஜி.எஃப்' படங்களுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்திருக்கும் ராக்கிங் ஸ்டார் யஷ், தனது அசாத்திய உடல்மொழி, ஆக்ரோஷமான லுக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

மாஃபியா தலைவியாக வரும் ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா, ருக்மிணி வசம்த் ஆகியோரும் துறுதுறுப்பான, மிரட்டலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு கோவாவின் பழங்காலத் தெருக்களையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மிக பிரம்மாண்டமாகப் படம் பிடித்துள்ளது.

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்குத் தேவையான மாஸ் மற்றும் பலத்தைக் கொடுத்துள்ளன.

ஹாலிவுட் தரத்தில் அனல்பறக்கும் சண்டைக் காட்சிகளை ஜே.ஜே.பெர்ரி மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com