'KGF 2'-க்கு பிறகு திரையில் யாஷ்.. 'Toxic' டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
Toxic
Toxic
Published on

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்ஸிக்'

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.

நடிகர்கள்

இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு

இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

புக்கிங்

வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் ஆன்லைன் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 21) அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.

டாக்ஸிக் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கே.ஜி.எப் படத்திற்குப் பிறகு யஷ் மற்றொரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com